- அரசு கல்லூரி
- வேலூர் முத்துரங்கம் கல்லூரி
- திருக்குறள்
- வேலூர்
- முதல்வர்
- அனுராதா
- வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரி
- வேலூர் முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வேலூர், ஜன.30: திருக்குறளின் அடிப்படை கருத்துகளை கடைபிடித்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என வேலூர் முத்துரங்கம் அரசுக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அரசு கல்லூரி முதல்வர் அனுராதா தெரிவித்தார். வேலூர் முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023ம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான 54வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் தரன் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி அரசுகலைக்கல்லூரி முதல்வர் அனுராதா கலந்துகொண்டு 902 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், ‘நீங்கள் கல்லூரியில் பயின்று தற்போது பட்டம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் தற்போது ஏதாவது ஒரு பணியில் பணியாற்றி வருவீர்கள். சிலர் மேல்படிப்பு படித்து வருவீர்கள். நீங்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் திருக்குறளை ஊன்றுகோலாக பயன்படுத்தி, அதன் அடிப்படை கருத்துக்களை கடைபிடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். படித்த படிப்புக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றார். இந்த பட்டமளிப்பு விழாவில் வணிக நிர்வாகவியல், வேதியியல், வணிகவியல், கணினி அறிவியல், பொருளியல், ஆங்கிலம், வரலாறு, கணிதம், சத்துணவு பரிமாறல் நிர்வாகம், இயற்பியல், தமிழ், விலங்கியல் ஆகிய துறைகளில் 647 இளங்கலை பட்டதாரிகள், 255 முதுகலை பட்டதாரிகள் என மொத்தம் 902 பேர் பட்டம் பெற்றனர். விழாவில், துறை தலைவர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
