- வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
- Thiruvalam
- காத்பாடி தாலுகா
- திருவலம், வேலூர் மாவட்டம்
- வேலூர்
- திருவண்ணாமலை
- திருப்பத்தூர்
- ராணிப்பேட்டை
திருவலம், ஜன.28: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பருவ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுவதாக பதிவாளர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த சேர்க்காட்டில் உள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 50க்கும் அரசு, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. மேலும் பல்கலைக்கழகத்தில் தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற துறைகளில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு பருவ ஆண்டிற்கான தேர்வுகளை கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் 77,588 மாணவ,மாணவிகள் எழுதினர். அத்தேர்வில் 70,124பேர் இளங்கலை, 7464 மாணவ, மாணவிகள் முதுகலை தேர்வுகளை எழுதியுள்ளனர். இதனையடுத்து தேர்வு முடிவுகளை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் மின்னஞ்சல் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவ, மாணவிகள் students login என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
