×

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிப்.4,5ம் தேதிகளில் ஆணையம் ஆலோசனை

டெல்லி: தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் மேற்பார்வையாளர்களாக பணியாற்றவுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டம் பிப்ரவரி.4,5ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்பை தற்போது இந்திய தேர்தல் ஆணையமானது அந்ததந்த மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களின் உள்த்துறை செயலர்கள் மட்டுமல்லாமல், 15 IAS அதிகாரிகளும், 10 IPS அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் அந்த கூட்டத்தில் பங்கேற்க தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி விரைவில் இந்திய தேர்தல் ஆணைய தலைமையிலான குழு என்பது சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அதிகாரிகளுக்கான அழைப்பை இந்திய தேர்தல் ஆணையமானது விடுத்துள்ளது.

Tags : Tamil Nadu ,West Bengal ,Delhi ,Assam ,Kerala ,Puducherry ,Election Commission ,
× RELATED அடையாறில் கொலை செய்யப்பட்ட பீகாரைச்...