×

வண்டலூர் – மீஞ்சூர் சாலையில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல்

 

ஆவடி: வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்குன்றம் பகுதியில் இருந்து காலணிகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று காலை வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தது. நெமிலிச்சேரி அருகே வந்தபோது திடீரென்று லாரியின் முன்பக்க டயர் வெடித்து சாலையில் கவிழுந்து விபத்திற்குள்ளானது.

இதில், லாரியை ஓட்டி வந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சாலையின் நடுவே லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பட்டாபிராம் போக்குவரத்து காவல் நிலைய போலீசார், வண்டலூர் செல்லும் வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி அனுப்பி போக்குவரத்து நெரிசலை சீர் செய்தaனர். மேலும், சாலையில் கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் அகற்றினர்.

Tags : Vandalur ,Meenjoor road ,Avadi ,Meenjoor ,Meenchur ,
× RELATED தென் அமெரிக்க மருத்துவரை கரம் பிடித்த...