×

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழகம் வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்!!

டெல்லி: சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர் முதல் நாளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழநாடு வரும் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு 2 நாட்கள் முகாமிட்டு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

முதல் நாளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் காட்சிகள் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார். வருமான வரித்துறை, சி.ஆர்.பி.ஏஃப். உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் குழு வருவதற்கு முன், துணை தேர்தல் ஆணையர்கள் தமிழ்நாடு வந்து ஆய்வு செய்ய உள்ளனர்.

Tags : Chief Election Commissioner ,India ,Tamil Nadu ,Delhi ,
× RELATED திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 7 நாள் தெப்பல் உற்சவம் தொடங்கியது