- விஜய் பப்பு
- வேகாடு
- செல்லூர் ராஜு
- மதுரை
- விஜய் செல்லூர் ராஜு
- விஜய்
- மேயர்
- நகராட்சிப்
- மதுரை ஜீவா
- மொழிப் போரின் தியாகியர்களின் பொதுக் கூட்டம்
மதுரை: ‘‘புதிதாக வந்தவர்களின் பப்பு இங்கு வேகாது’’ என விஜயை செல்லூர் ராஜூ தாக்கிப் பேசினார். மதுரை ஜீவா நகரில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில், பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: புதிதாக வந்தவர்கள் புதிய ஆட்சியை கொடுத்து விடுவோம் என்று சொல்வார்கள். அவர்களது பப்பு எல்லாம் இங்கு வேகாது.
இளைஞர்களே நடிப்பை வைத்து நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். அவர்களுக்கு கொள்கை இருக்கிறதா? நான் ஒழுங்காக இருக்கிறேன் என்றால், அது எம்ஜிஆர் கற்றுக்கொடுத்த பாடம். எந்த படத்திலும் குடிக்காமல் நல்வழிப்படுத்த வேண்டும். இதை எந்த நடிகராவது கற்றுக் கொடுத்திருக்கிறாரா? புதிதாக வந்தவர்கள் என விஜயை மறைமுகமாக குறிப்பிட்டு, அவரது பப்பு வேகாது என செல்லூர் ராஜூ தாக்கியுள்ளார்.
