×

குதிரை வியாபாரியை கல்லால் தாக்கிய வாலிபர் அதிரடி கைது

கோவை, ஜன. 26: கோவை சவுரிபாளையம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (37). இவர், குதிரை வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரம் தொடர்பாக தேவநாதன் (30) என்பவரிடம் பணம் வாங்குவதற்காக சென்றார்.

அப்போது தேவநாதன் பணம் தர மறுத்து அவரிடம் வாக்குவாதம் செய்து, கீழே கிடந்த கல்லை எடுத்து சரவணக்குமாரை தாக்கியுள்ளார். இதில் தலையில் காயம் அடைந்த சரவணகுமார், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவநாதனை கைது செய்தனர்.

 

Tags : Coimbatore ,Saravanakumar ,Indira Nagar ,Souripalayam, Coimbatore ,Devanathan ,
× RELATED திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மாயம்