×

யூரோபா லீக் கால்பந்து ஓஜிசி நைஸ் அபாரம்: டியாகோ 2 கோல் போட்டு அசத்தல்

இஸ்தான்புல்: யூரோபா லீக் கால்பந்து போட்டியில் நேற்று, ஓஜிசி நைஸ் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் கோ அஹட்ஈகிள்ஸ் அணியை வெற்றி வாகை சூடியது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் யூரோபா லீக் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில் ஓஜிசி நைஸ் அணியும், கோ அஹட்ஈகிள்ஸ் அணியும் மோதின. துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய நைஸ் அணி வீரர்கள் போட்டியின் பெரும்பாலான நேரத்தில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

போட்டியின் 10வது நிமிடத்தில் அந்த அணியின் சார்லஸ் வான்ஹவுட் தனது அணிக்காக முதல் கோல் போட்டு அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அந்த அணியின் டியாகோ கொவேயா 41 மற்றும் 59வது நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோல் போட்டு தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இரண்டாவது பாதியில் சுதாரித்து ஆடிய ஈகிள்ஸ் அணியின் பின் ஸ்டோக்கெர்ஸ் 68வது நிமிடத்தில் தனது அணிக்காக முதல் கோல் போட்டார்.

இருப்பினும் அதன் பின் கோல்கள் விழாததால், 3-1 என்ற கோல் கணக்கில் நைஸ் அணி அபார வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் டினாமோ ஜாக்ரெப், எப்சிஎஸ்பி அணிகள் மோதின. இப்போட்டியில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக ஆடிய டினாமா அணியின் மவுன்செப் பாக்ரார் 7வது நிமிடத்தில் முதல் கோல் போட்டார். டியான் டிரெனா பெஜோ 11 மற்றும் 71வது நிமிடங்களில் இரு கோல் போட்டு அசத்தினார்.

தவிர, அந்த அணியின் சாண்ட்ரோ குலெனோவிக் 90+3வது நிமிடத்தில் 4வது கோல் போட்டார். மாறாக, எப்சிஎஸ்பி அணியின் டேனியல் பிர்லிகியா 42வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். அதனால், 4-1 என்ற கோல் கணக்கில் டினாமோ அணி வெற்றி வாகை சூடியது. இந்த தொடரில் லியான் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்டன் வில்லா அணி 18 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளன.

Tags : Europa League Football ,OGC Nice ,Diego ,Istanbul ,Yesterday ,Go Ahead Eagles ,Europa League ,Istanbul, Turkey ,
× RELATED நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி..!