- ஆஸி ஓபன் டென்னிஸ்
- சபலெங்கா
- மெல்போர்ன்
- அரினா சபலெங்கா
- அனஸ்தேசியா போடோபோவா
- ஆஸ்திரேலிய ஓபன்
- ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்
- மெல்போர்ன், ஆஸ்திரேலியா...
மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா, ரஷ்ய வீராங்கனை அனஸ்டாஸியா போடபோவாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்ற நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றுப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா, ரஷ்யாவை சேர்ந்த அனஸ்டாஸியா போடபோவா மோதினர். சபலென்காவுக்கு ஈடுகொடுத்து போடபோவா ஆடியதால் இரு செட்களும் டைபிரேக்கர் வரை நீண்டன. இருப்பினும் தனது அனுபவத்தாலும் ஆக்ரோஷ ஆட்டத்தாலும், 7-6 (7-4), 7-6 (9-7) என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய சபலென்கா 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 3வது சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் கோகோ காஃப், ஹேலி பாப்டிஸ்டே மோதினர். முதல் செட்டில் அற்புதமாக ஆடிய ஹேலி 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். இருப்பினும் அடுத்த இரு செட்களிலும் சுதாரித்து அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய காஃப், 6-0, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்களை வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
