- எங்களுக்கு
- உக்ரைன்
- ரஷ்யா
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
- அபுதாபி
- ஜனாதிபதி
- ஜெலென்ஸ்கி
- டிரம்ப்
- உலகம்
- பொருளாதாரம்
- மன்றம்
- டாவோஸ், சுவிட்சர்லாந்து...
அபுதாபி: உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதி நிலவ அமெரிக்கா முன்னிலையில் ரஷ்யாவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று அமீரகத்தில் தொடங்கியது. சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக இரு தலைவர்களுமே தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக அமெரிக்கத் தூதர்களான ஸ்டீவன் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோ சென்று ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சூழலில் தான் அமைதியை நிலைநாட்டும் அடுத்தக்கட்ட முயற்சியாக மும்முனைப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிகாரிகள் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல்கட்ட பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டமானது 23ம் தேதி மற்றும் 24ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில், ‘உடனடியாக முன்னேற்றம் ஏற்படாது என்றாலும், பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பதை விடப் பேசுவது சிறந்தது; உக்ரைன் மட்டுமின்றி ரஷ்யாவும் சமரசம் செய்துகொள்ளத் தயாராக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
நிலப்பரப்பு தொடர்பான ஒரே ஒரு முக்கியப் பிரச்னையில் தான் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் முடிவு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பில் மூன்று தரப்பினரும் நேரடியாகப் பேசுகிறார்களா அல்லது அமெரிக்க அதிகாரிகள் மூலம் தனித்தனியாகப் பேசுகிறார்களா என்பது குறித்த தெளிவான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
