- OPS
- பிறகு நான்
- முன்னாள்
- தலைமை நிர்வாகி
- ஓ பன்னீர் செல்வம்
- முன்னாள் முதல்வர்
- சென்னை
- பெரியகுளம், தேனி மாவட்டம்
தேனி: தை மாதம் முடிவதற்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இன்று சென்னைக்கு செல்கிறேன். இரண்டு நாட்களில் சென்னையில் மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடக்கும். அதன்பிறகு கூட்டணி குறித்த உங்கள் கேள்விக்கு உரிய பதில் கிடைக்கும்’ என்றார்.
அப்போது, மதுராந்தகத்தில் பிரதமர் தலைமையில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு, ‘‘எல்லாமே தெரிந்து கொண்டு கேள்வி கேட்கிறீர்களே’’ என்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து யாராவது உங்களிடம் பேசினார்களா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு இரண்டு நாள் பொறுங்கள்’’ என்றார். மேலும், கூட்டணி குறித்து தை மாதம் முடிவதற்குள் அறிவிக்கப்படும்’ என்றார்.
