×

அமண்டா அமர்க்களம்

மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டி ஒன்றில் நேற்று, போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக், செக் வீராங்கனை மேரி பூஸ்கோவா மோதினர். துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய இகா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி 3வது சுற்றுக்குள் எளிதில் நுழைந்தார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, செக் வீராங்கனை கேதரீனா சினியகோவா மோதினர். இப்போட்டியில் அமர்க்கள ஆட்டத்தை வெளிப்படுத்திய அமண்டா, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் ஜெஸிகா பெகுலா, மெக்கார்ட்னீ கெஸ்லர் மோதினர். ஜெஸிகாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத கெஸ்லர், 0-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார். ஜெஸிகா 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

* முதல் சுற்றில் யூகி தோல்வி
ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையர் போட்டியில் நேற்று, இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, அமெரிக்க வீராங்கனை நிகோல் மார்டினெஸ் இணை, ஜெர்மன் வீரர் டிம் பூட்ஸ், சீன வீராங்கனை ஜாங் சுவாய் இணையுடன் மோதியது. இப்போட்டியில் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக் கணக்கில் பறிகொடுத்த யூகி பாம்ப்ரி இணை, 2வது செட்டில் கடுமையாக போராடியது. இருப்பினும், அந்த செட்டையும் 6-7 (3-7) என்ற புள்ளிக் கணக்கில் யூகி பாம்ப்ரி இணை இழந்தது. அதனால், 0-2 செட் கணக்கில் தோல்வியுற்ற யூகி பாம்ப்ரி இணை போட்டியில் இருந்து வெளியேறியது.

Tags : Amanda Amarkalam ,Ika Swiatek ,Marie Puskova ,Ika ,
× RELATED டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நியூசிலாந்து அணி வீரர் ஆடம் மில்னே விலகல்!