×

தங்க பதக்கம் வென்ற தமிழகத்தின் அவிக்சித்

லே: லடாக்கின் லே பகுதியில், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஆடவர் பிரிவில் நேற்று நடந்த 500 மீட்டர் தூர ஸ்கேட்டிங் போட்டியில் தமிழக வீரர் அவிக்சித் விஜய் விஸ்வநாத், போட்டி தூரத்தை 43.48 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இந்த பதக்கத்தை 2வது முறையாக தொடர்ந்து அவர் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியின் மகளிர் பிரிவில், மத்தியப்பிரதேச வீராங்கனை உத்ரேகா சிங் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

Tags : Tamil Nadu ,Avikshit ,Leh ,Khelo India Winter Games ,Leh, Ladakh ,Avikshit Vijay Viswanath ,
× RELATED டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நியூசிலாந்து அணி வீரர் ஆடம் மில்னே விலகல்!