×

குடியரசு தினத்தை முன்னிட்டு கரூர் ஆயுதப்படை ஒத்திகை நிகழ்ச்சி

கரூர், ஜன. 22: குடியரசு தினத்தை முன்னிட்டு கருர் ஆயுதப்படை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியா முழுவதும் ஜனவரி 26ம்தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த விழாவினை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இதனையடுத்து, போலீசார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் அருகேயுள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், அணிவகுப்பு மரியாதை போன்றவை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை சரியாக செய்து காட்டும் வகையில் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை துவங்கியது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 4நாட்களுக்கு நடைபெறும் எனவும், அனைத்து காவலர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொள்வார்கள்.

 

Tags : Armed ,Republic Day ,Karur ,Karur Armed ,India ,
× RELATED பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் மீது வழக்கு