×

ஒன்றிய அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 22 பேரும் விடுதலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த 2018ம் ஆண்டு வந்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பரமக்குடி அருகே பார்த்திபனூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கருப்புக்கொடி காட்டப்பட்டது. இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள் முருகவேல், திசைவீரன், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி உள்ளிட்ட 22 பேர் மீது பார்த்திபனூர் போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் நடந்து வந்தது. 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள் முருகவேல், திசைவீரன் உள்ளிட்ட 22 பேரை நீதிபதி நிலவேஸ்வரன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Tags : Union Minister ,Ramanathapuram ,Parthibanur ,Paramakudi ,Nirmala Sitharaman ,Ramanathapuram district ,DMK ,Subha ,Thangavelan ,Sathyamoorthy ,MLAs… ,
× RELATED பழனி முருகன் கோயிலில் 3 நாட்கள் தரிசனக் கட்டணம் ரத்து