×

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி ஆரணி அருகே சோகம் வீட்டிற்கு வெளியே விளையாடியபோது

ஆரணி, ஜன. 22: ஆரணி அருகே வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் இளவரசன்(27), தொழிலாளி. இவரது மனைவி பவானி. இவர்களது மகன்கள் ராகவ்(6), சஞ்சீவ் மித்ரன்(3) மற்றும் மகள் இசைநிலா(5). நேற்றுமுன்தினம் மாலை பவானி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, சஞ்சீவ் மித்ரன் வீட்டிற்கு வெளியே குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். பின்னர் திடீரென சஞ்சீவ் மித்ரன் காணவில்லையாம்.

இதனால் இளவரசன் மற்றும் குடும்பத்தினர் நீண்ட நேரமாக தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. தொடர்ந்து இரவு 9 மணியளவில் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் பார்த்தபோது, சஞ்சீவ் மித்ரன் தவறி விழுந்து தண்ணீரில் முழ்கியிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். உடனடியாக சஞ்சீவ் மித்ரனை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து இளவரசன் நேற்று கொடுத்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Arani ,Pillaiyar Koil Street, Rattinamangalam ,Tiruvannamalai district… ,
× RELATED மயிலார் பண்டிகை கொண்டாட்டம்...