×

திருவெண்ணெய்நல்லூர் அருகே பிளஸ்-2 மாணவன் கொலை வழக்கில் தந்தை, மகன் அதிரடி கைது

திருவெண்ணெய்நல்லூர், ஜன. 21: திருவெண்ணெய்நல்லூர் அருகே பிளஸ்-2 மாணவனை கொலை செய்த வழக்கில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கொலையாளிகளான தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மழையம்பட்டு தக்கா கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை அதே ஊரை சேர்ந்த வீரப்பன் மகன் 12ம் வகுப்பு படித்து வந்த விக்னேஷை (17), மாடு மேய்ந்த தகராறில் அதே ஊரை சேர்ந்த பெருமாள் மகன் சுப்பிரமணி (44), அவரது மனைவி பூபதி (36), மகன் அஜய் (20) மற்றும் மேலமங்கலம் கிராமத்தை சேர்ந்த செங்கல் சூளை முதலாளி நரசிம்மன் மகன் சந்தோஷ் ஆகிய 4 பேரும் சேர்ந்து தடியால் தாக்கி கொலை செய்தனர். இவ்வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் தலைமறைவான நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் மேற்பார்வையில் திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் அழகிரி, காவல் எஸ்ஐக்கள் அன்பழகன், சுந்தர்ராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலை குற்றவாளிகளான சுப்ரமணி, அவரது மகன் அஜய் ஆகிய இருவரையும் நேற்று மடக்கி பிடித்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags : Thiruvennainallur ,Villupuram district… ,
× RELATED மற்ற தலைவர்களின் ஆதரவாளர்கள் ரிஜக்டு...