- ஸ்ரீ
- சொர்ணஹர்ஷண பைரவர்
- விநாயகப் பெருமான்
- முருகன் பகவான்
- தன்வந்திரி பகவான்
- பகவான் ஹயக்ரீவர்
- விஷ்ணு பகவான்
- மகாலட்சுமி
- இறைவன் குபேரா
ஞானத்தின் கடவுளாக விநாயகரும், வீரத்தின் கடவுளாக முருகனும், மருத்துவத்தின் கடவுளாக தன்வந்திரியும், கல்வியின் கடவுளாக ஹயக்ரீவரும் விளங்குகின்றனர். இதேபோன்று செல்வத்தின் கடவுளாக மகாவிஷ்ணு, ஸ்ரீ மகாலட்சுமி குபேரன் ஆகியோர் விளங்குகின்றனர். ஆனால், இவர்களுக்கு செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்த கடவுளாக விளங்குபவர் ஸ்ரீ சொரணாஹர்ஷண பைரவர் ஆவார். சொர்ணம் என்றால் தங்கம். ஆகர்ஷணம் என்றால் வரவழைத்தல் என்று பொருள்படும்.
நவகிரகங்களில் காலபைரவர் சனீஸ்வர பகவானுக்கு மட்டும் குருவல்ல மற்ற கிரகங்களுக்கும் அவர்தான் குரு.
நவகிரகங்களில்….
சூரியனின் பிராண தேவதையாக ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் பைரவி,
சந்திரனின் பிராண தேவதையாக கால பைரவர் இந்திராணி,
செவ்வாயின் பிராண தேவதையாக சண்ட பைரவர், கௌமாரி.
புதனின் பிராண தேவதையாக,
உன்மத்த பைரவர் வாராகி,
குருவின் பிராண தேவதையாக
அசிதாங்க பைரவர், பிராம்ஹி.
சுக்கிரனின் பிராண தேவதையாக குரு பைரவர், மகேஸ்வரி.
சனியின் பிராண தேவதையாக
குரோதன பைரவர், வைஷ்ணவி.
ராகுவின் பிராண தேவதையாக
சம்ஹார பைரவர் சண்டி.
கேதுவின் பிராணதேவதையாக பீஷ்ண பைரவர், சாமுண்டி.
– என்ற திருநாமங்களில் சக்தி அம்சத்தோடு காலபைரவர் விளங்குகிறார்.
நமக்கு செல்வ வளத்தை வாரி வழங்குபவர்கள் அஷ்ட லட்சுமிகள்தான்
பிருகு முனிவரின் மகளாக ஸ்ரீஆதி லட்சுமி (ரமாலட்சுமி)
பொன் பணத்திற்கு செல்வத்திரு தனலட்சுமி.
வேளாண்மை வளத்திற்கு தானியத்திரு தானிய லட்சுமி.
கால்நடைகள் மூலம் வளம் பெற வேழத்திரு கஜலட்சுமி.
குழந்தை பேறு பெற அன்னைத்திரு சந்தான லட்சுமி.
வீரம், வலிமை பெற திரள்திரு வீரலட்சுமி (தைரிய லட்சுமி)
எடுத்த காரியங்களில் ஜெயிக்க
வெற்றிதிரு விஜயலட்சுமி.
அறிவு கலைகளில் தேர்ச்சி பெற
கல்விதிரு வித்யாலட்சுமி ஆகிய அஷ்டலட்சுமியாக ஸ்ரீ மகாலட்சுமி விளங்குகிறார்.
இது தவிர, வாழ்வில் செல்வ வளம் பெற வளத்திரு ஐஸ்வர்ய லட்சுமி.
நன்மைகள் அதிகம் பெற நற்றிரு சௌபாக்யலட்சுமி.
அரச போகங்களை அருளும் நகர்த்திரு ராஜ்ய லட்சுமி.
வரங்கள் அருளும் வரத்திரு
வரலட்சுமி
ஸ்ரீ ஆகியோர் இந்த வரிசையில் குறிப்பிடப்படுகின்றனர்.
அஷ்ட லட்சுமிகளும் நமக்கு செல்வ வளத்தை தர வேண்டி, ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் ஸ்ரீ சொர்ணாகர்ஷண திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர். இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் _ சொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோயிலுக்குச் சென்று ராகு காலம் முழுவதும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூல மந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
நன்மைகள்
* நமக்கு வரவேண்டிய பணம் தானாகவே வரத் துவங்கும்.
* நாம் தரவேண்டிய பணத்தை திருப்பித் தரும் அளவிற்கு நமக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
* இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு ஆழ்ந்த மன நிம்மதி, குடும்ப ஒற்றுமை ஏற்படும். தொழில் வளர்ச்சி வியாபாரம் முன்னேற்றம் உண்டாகும்.
ஸ்ரீ சொர்ணாகர்ஷண
பைரவரின் காயத்ரி மந்திரம்
ஓம் பைரவாய வித்மஹே
ஹரி ஹரப்ரம்ஹாத் மகாய தீமஹி
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷண பைரவ ப்ரசோதயாத்.
ஸ்ரீ சொர்ணாகர்ஷண
பைரவரின் மூல மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஸ்ரீம்
ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம
தாரித்ரிய வித்வேஷணாய
மஹா பைரவாய நமஹ _ம் ஹ்ரீம் ஐம்.
தமிழ்நாட்டில் ஸ்ரீ சொர்ணாகர்ஷண
பைரவர் இருக்கும் கோவில்கள்
* திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் 10வது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் _ சொர்ணாகர்ஷண பைரவர் இருக்கிறார்.
* தேவகோட்டை அருகில் தவசு மலையில் அருள்கிறார்.
* காரைக்குடி அருகே இலுப்பைக்குடி.
* திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்.
* சிதம்பரம்.
* காஞ்சிபுரம் அருகே அழிபடை தாங்கி.
* சென்னை தாம்பரத்தில் இருந்து வேலூர் செல்லும் வழியில் இருக்கும் படைப்பையில் ஸ்ரீ ஜெய துர்கா பீடம்.
* அர்த்த நாரீஸ்வரர் திருக்கோயில், நங்கநல்லூர் – சென்னை.
* ரெட் ஹில்ஸ் சென்னை.
* ஸ்ரீ கனகதுர்க்கா ஆலயம் காளமேகம் தெரு, மேற்கு முகப்பேர் சென்னை.
v அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோயில் மணப்பாக்கம் சென்னை.
* அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோயில் அந்தியூர் ஈரோடு மாவட்டம்.
* சீர்காழியில் தனி ஆலயம்.
* ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் வளாகம் மேட்டுப்பாளையம்.
* பழனி ஆண்டவர் முருகன் கோயில் தெரு, பெரம்பூர் சென்னை.
* சேலம் அருகிலுள்ள ஆறகழூர்.
* மத்ய கைலாஷ் கோயில் கஸ்தூரிபாய் நகர், அடையாறு சென்னை.
* அருள்மிகு. காங்கீஸ்வரர் திருக்கோவில் காங்கேயநல்லூர், வேலூர் மாவட்டம்.
* ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் வளாகம். ஆர். எஸ். புரம் கோயம்புத்தூர்.
* சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்.
தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளில் மேற்கண்ட _ சொர்ணாகர்ஷண பைரவர் கோயில்களில் அல்லது உங்கள் பகுதியிலேயே உள்ள சொர்ணாகர்ஷண கோயிலுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் செல்வச் செழிப்பின் உச்சத்தை அடைய முடியும்.
