×

போட்டோவை தவறாக பயன்படுத்தியதால் திருமணம் நின்றது குறைதீர்வு கூட்டத்தில் பெண் மீது வாலிபர் புகார் இன்ஸ்டாவில் எனது

வேலூர், ஜன.20: இன்ஸ்டாகிராமில் எனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்திய திருமணமான பெண்ணால், எனது திருமணம் பாதியில் நின்றுவிட்டது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வாலிபர் ஒருவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு அளித்தார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ சிவசுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையை சேர்ந்த 27 வயது வாலிபர் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘இன்ஸ்டாகிராமில் என்னுடைய புகைப்படத்தை, குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தவறாக பயன்படுத்தியுள்ளார். இதனால் என்னுடைய வாழ்க்கை மற்றும் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, எனக்கு நடைபெற இருந்த திருமணம் பாதியில் நின்றுவிட்டது. எனவே எனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தும் அந்த பெண் மீது நடவடிக்கை எடுத்து எனது புகைப்படத்தை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Vellore ,Vellore Collector ,
× RELATED வேலூரில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியை உடல் உறுப்புகள் தானம்