வேலூர், மார்ச் 9: இந்தியாவின் பொதுபோக்குவரத்து சேவைகளில் பிரதானமாக விளங்குவது விளங்குவது ரயில் சேவை. நாடு முழுவதும் தற்போதைய நிலையில் 19 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 4 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பயணிகளின் வசதிக்காகவும், செலவை குறைப்பதற்காகவும் பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
