சென்னை: 2021 தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 401-ஐ திமுக அரசு நிறைவேற்றியுள்ளது என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். 101 வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு காரணம் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தராததுதான். ஒன்றிய அரசு நிதி கொடுக்காமல் வஞ்சித்தாலும் அதனை எப்படி கையாள வேண்டும் என திமுக அரசுக்கு தெரியும் என கனிமொழி தெரிவித்தார்.
