×

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

 

சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஜன.26, ஒத்திகை நாட்கள் ஜன.19,21,23 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே ஜன.26ல் குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் வாகனங்களுக்கு அனுமதியில்லை. பெசன்ட் சாலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் ஹவுஸ் நோக்கி திருப்பிவிடப்படும். காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலை நோக்கி திருப்பிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Chennai ,Republic Day ,Republic ,Kamarajar Road, Chennai ,
× RELATED இன்றே டெல்லி விரையும் தவெக தலைவர் விஜய்!