சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை (22 காரட்) கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,280க்கு விற்றது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,06,240க்கு விற்பனையானது. அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் நேற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,090க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,720க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் சரிவை கண்டிருந்த வெள்ளி நேற்று மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.4 அதிகரித்து ரூ.310க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.4,000 அதிகரித்து ரூ.3,10,000க்கு விற்றது.
