×

மஞ்சுவிரட்டு எருதாட்டத்தில் 5 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் ஊருக்கு வெளியே காட்டுப்பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டியை இளைஞர்கள் நேற்று நடத்தினர். இதனை வேடிக்கை பார்த்த செந்தாரப்பட்டி பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்த சின்னதம்பி மகன் சக்திவேல் (24) மாடு முட்டிஉயிரிழந்தார். இதேபோல், தம்மம்பட்டி கொண்டையம்பள்ளி மாரியம்மன் கோயில் திடலில் நேற்று மதியம் நடந்த எருதாட்டத்தை வேடிக்கை பார்த்த ெஜகதீஷ் மனைவி வினிதா (30), மயங்கி விழுந்து இறந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சவுளூரில் நேற்று எருதாட்டம் நடந்தது. இதில் காளை முட்டியதில் மூலிக்கால் சவுளூரைச் சேர்ந்த இளவரசன் (39) குடல் சரிந்து பலியானார்.
சிவகங்கை மாவட்டம், சூரக்குடி கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த மஞ்சுவிரட்டை பார்க்க சென்ற கம்பனூர் அழகர்சாமி(60) காளை முட்டிஉயிரிழந்தார். சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த புக்கம்பட்டியில் எருதாட்டத்தில் காளை முட்டி விவசாயி ராஜ்குமாரும் (58) ஆத்தூர் அருகே கீரிப்பட்டியில் நடந்த எருதாட்டத்தில் காளை முட்டியதில் காட்டுகொட்டாயைச் சேர்ந்த பெரியசாமி(65) பலியானார்.

Tags : Salem ,Sentharapatti ,Athur ,Salem district ,Sakthivel ,Chinnathambi ,Pillayarkoil Street, Sentharapatti ,Dhammampatti ,
× RELATED துபாயில் நடந்த கார் பந்தயத்தில்...