×

அடுத்த 10 ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகை வழிநடத்த வேண்டும்: பிரதமர் மோடி விருப்பம்

 

புதுடெல்லி: வரும் பத்து ஆண்டுகளில் புதிய ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகை வழிநடத்த வேண்டும் என்பதே இலக்கு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதன் 10 ஆண்டுகளையொட்டி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி,\\”ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் மற்றும் தொழில்முனைவோர் புதிய சிந்தனைகளில் பணியாற்றி, சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும்.

அதே நேரத்தில் அனைவரும் தரமான தயாரிப்புக்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். வரும் பத்து ஆண்டுகளில் புதிய ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகை வழிநடத்த வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்முனைவோரின் தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் புத்தாக்கத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நாட்டின் எதிர்காலம் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

ஸ்டார்ட்அப்கள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்றைய ஆராய்ச்சி நாளைய அறிவுசார் சொத்தாக மாறுகின்றது. ஸ்டார்ட்அப்களுக்கு ஆரம்பகட்ட நிதி வழங்குவதற்கு பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காலாவதியான விதிகள் நீக்கப்பட்டுள்ளன. புதுமைப் படைப்பாளிகளை நாங்கள் நம்பியிருக்கிறோம்” என்றார்.

Tags : India ,PM Modi ,New Delhi ,Modi ,Startup ,Bharat Mandapam ,Delhi… ,
× RELATED திரைப்பட நிறுவன மேல்முறையீட்டு மனு...