மதுரை : மதுரை பாண்டியன் ஹோட்டல் வசம் இருந்த 5.9 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டது தமிழ்நாடு அரசு. ஹோட்டல் இருந்த இடத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று மீட்டது. நிலத்தை மீட்ட அடுத்த நாளே, ‘ஓட்டல் தமிழ்நாடு’ அலுவலகத்தை அங்கே நிறுவி புக்கிங் செயல்முறைகளை தொடங்கியது அரசு. மே 2025ல் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நேற்று நிலத்தை மீட்க ஆணை பிறப்பித்தார்.
