×

பாலமேடு ஜல்லிக்கட்டு : 5வது சுற்றின் முடிவில் 455 காளைகள் களம் கண்டன, 81 மாடுகள் பிடிபட்டன, 7 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!!

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 5வது சுற்றின் முடிவில் 455 காளைகள் களம் கண்டன. இதில் 81 மாடுகள் பிடிபட்டன. 7 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர். 5வது சுற்றின் முடிவில் பொந்துகம்பட்டியைச் சேர்ந்த அஜித் 12 காளைகளை அடக்கியுள்ளார். பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் 11 காளைகளையும் நத்தம் பார்த்திபன் 8 காளைகளையும் பிடித்துள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 5 மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 4, பார்வையாளர்கள் 4 பேர் என 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Tags : Palamedu Jallikatu ,Madurai ,Pondugambatti ,
× RELATED பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி : 4வது சுற்றின் முடிவில் 379 காளைகள் களம் கண்டன!!