×

கோயிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு தனி நபர் சுற்றுசுவர் கட்டுவதை கண்டித்து உண்ணாவிரதம்

வலங்கைமான், ஜன. 27: வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் ஊராட்சியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைத்து வருவதை கண்டித்து நேற்று நடைபெற்ற அதிகாரிகளின் சமரசப் பேச்சுவார்த்தை எடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் ஊராட்சியில் பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து நேற்று சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை துவங்கி உள்ளார் இந்நிலையில் இதனை கண்டித்து கும்பகோணம் மன்னார்குடி சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையில் திமுக ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி ஒன்றிய குழு உறுப்பினர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கும் அதிகமானோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் வலங்கைமான் எஸ்ஐ வீரபாண்டியன் ஆகியோர்உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது அதிகாரிகள் தற்போது சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இரண்டு தினங்களுக்குள் அளவில் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

Tags : land ,individual ,
× RELATED கள்ளபள்ளியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்போர் கோரிக்கை