×

பஸ்நிலையத்தில் பழுதான சாலை பயணிகள் கடும் அவதி

பொள்ளாச்சி, ஜன. 27: பொள்ளாச்சி நகர் கிராம பகுதியில், அன்மையில் பெய்த மழையால்  பல சாலைகள் பெயர்ந்து உள்ளது. பல இடங்களில் ரோடு பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், சேதமான ரோட்டில் வரும்  வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.  ஆனால் அதனை விரைந்து, முறையாக சீரமைக்கும் பணி நடைபெற வில்லை. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடமான மத்திய பஸ்நிலைய பகுதியிலும் இரண்டு வாரத்திற்கு முன்பு பெய்த மழையால் ரோடு பெயர்ந்துள்ளது. கோவை வழித்தட பஸ் செல்லும் இடத்தில்,  பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும், பஸ் நிலைய நுழைவாயிலில், மழையால் ஜல்லிபெயர்ந்து ரோட்டில் பெரிய அளவில் குழி விழுந்துள்ளது என்பது தெரிந்தும், சம்பந்தபட்ட அதிகாரிகள் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். பயணிகள் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. எனவே மழையால் பாதிக்கப்பட்டு சீரமைக்காத, பஸ்நிலைய பகுதி ரோட்டை போர்க்கால அடிப்படையில் முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க தன்னார்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road passengers ,bus stand ,
× RELATED வேலூர் புதிய பஸ்நிலையம் பின்புறம் 11.03...