×

பதுக்கல் மது விற்றவர்கள் சிக்கினர்

பேரையூர், ஜன. 12: பேரையூர் பகுதியில் சேடபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருங்காமநல்லூரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பிச்சைமணி (49) என்பவரை கைது செய்தனர். இதேபோல் மெய்யனூத்தம்பட்டி பகுதியில் முனியம்மாள் (57) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார்.

அவரை சாப்டூர் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே கிளாங்குளம் மந்தையில் சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் சென்ற பேரையூர் போலீசார் பாண்டி (66), கணேசன் (65), சமையன் (62), ஞானசேகரன் (63), ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

 

Tags : Peraiyur ,Setapatti ,Pichaimani ,Perungamanallur ,Muniyammal ,Meiyanuthampatti ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை