×

பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனுமில்லை குடியரசு தின சிறப்பு கூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜன.26: திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியரசு தின சிறப்பு கூட்டம் மற்றும் மார்க்க அறிவுத்திறன் பரிசளிப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் முகம்மது மிஸ்கீன் தலைமையில் முத்துப்பேட்டையில் நடைபெற்றது.  மாவட்ட செயலாளர் யாசர் அரபாத், துணை தலைவர் அன்சாரி, துணை செயலாளர்கள் அசாருதீன், அப்துல் ஹமீது, ஹாஜா மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் முஹம்மது பயாஸ், மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஷீத் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். மார்க்க அறிவுத்திறன் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது

Tags : meeting ,Republic Day ,
× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்