×

சீர்காழியில் இந்திய கம்யூனிஸ்ட் கூட்டம்

சீர்காழி, ஜன. 26: சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. இடும்பையன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்லப்பன் வரவேற்றார். நாகை எம்பி செல்வராசு பங்கேற்று அரசியல் விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் மதுரையில் பிப்ரவரி 18ம் தேதி நடைபெறும் தமிழகத்தை மீட்போம் அரசியல் எழுச்சி மாநாட்டுக்கு சீர்காழியில் இருந்து 100 வாகனத்தில் சென்று பங்கேற்பது. வரும் சட்டமன்ற தேர்தலில் சீர்காழி தனி தொகுதியில் போட்டியிடுவது. திமுக கூட்டணியில் தொகுதியை கேட்டு பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சிவராமன், கிருஷ்ணமூர்த்தி, அறிவழகன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வீரராஜ், ராமன், கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Communist Party of India ,meeting ,Sirkazhi ,
× RELATED திமுகவுடன் தொகுதிப்பங்கீட்டில்...