×

ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

தேனி, ஜன.26: தேனியில் ஆதித்தமிழர் பேரவை தொழிலாளர் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி நகர் பங்களாமேட்டில் ஆதித்தமிழர் பேரவை தொழிலாளர் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலைவேந்தன் காளிதாஸ் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் நீலகணலன் வரவேற்று பேசினார். தேனி மாவட்ட செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் பாண்டியன் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், புதிய வேளாண்மை சட்டத்தால் விவசாய நிலங்களில் வேலை இழந்து வாடும் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், தேனி மாவட்டத்தில் தொழிலாளர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதையும் தாக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும், நல வாரியங்களில் பதிவு செய்துள்ள அனைத்து உடல் உழைப்பு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் பை மற்றும் நிதி வழங்க வேண்டும், தேனி மாவட்டத்தில் வாடகை மற்றும் ஒத்தி போன்ற குடியிருப்பு வீடுகளில் வாழும் வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், பள்ளிக்குச் செல்லும் தொழிலாளர் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்டத் துணைச் செயலாளர் இளந்திரையன் நன்றி கூறினார்.

Tags : Demonstration ,Adithya Tamil Assembly ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்