- தமிழ்நாடு அரசு
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- அமலாக்க இயக்குநரகம்
- காவல்துறை டி.ஜி.பி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மத்ராஸ் உயர் நீதிமன்றம். ...
புதுடெல்லி: தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறை டி.ஜி.பி.க்கு கடந்த 2024ம் ஆண்டு அமலக்கத்துறை கடிதம் எழுதியது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்தது.
இதை எதிர்த்து தமிழ்நாடஅரசு தாக்கல் செய்த மனுவில் அமலா க்கத்துறைதாக்கல் செய்துள்ள மனு விசாரணை க்கு உகந்தது கிடையாது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மணல் கொள்ளை வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
