×

கொடைக்கானல் பேரிஜம் ஏரி 10 மாதமா மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானல், ஜன. 26: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியை கண்டு ரசிக்க அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி ஒன்றாகும். இங்கு வனத்துறையின் அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும். கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக இப்பகுதி கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. வனத்துறையின் மற்ற அனைத்து சுற்றுலா தலங்களும் திறந்துள்ள நிலையில் பேரிஜம் ஏரியை கண்டு ரசிக்க மட்டும் இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர், பேரிஜம் ஏரிக்கு சென்று வர உடனே அனுமதியளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodaikanal Perijam Lake ,
× RELATED கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல ரூ.300-ஆக கட்டணம் உயர்வு.: வனத்துறை