×

அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடைகோரி மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை: தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜாய் கிரிசில்டா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, தனது மனைவியை விவகாரத்து செய்து விட்டு திருமணம் செய்து உடன் வாழ்வதாக கூறி ரங்கராஜ் ஏமாற்றி விட்டார்.ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி மகளிர் ஆணையம் உத்தரவிட்டும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வாதிட்டார்.

மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது நற்பெயரை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் மோசமான வீடியோக்களை பரப்பி, யூடியூப் சேனல்கள் பணமாக்கி வருகின்றன. அத்தகைய யூடியூப் சேனல்கள் தங்களை பற்றி அவதூறான வீடியோக்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார், மாதம்பட்டி ரங்கராஜின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Madhampatti Rangaraj ,Joy Crisilda ,Court ,Chennai ,Justice ,N. Senthilkumar ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...