சென்னை: கோட்ட அளவிலான பென்சன் அதாலத் (Pension Adalat) வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு முதுநிலை கண்காணிப்பாளர் சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் நடக்கிறது. பென்சன்தாரர்கள் ஏதேனும் புகார்இருப்பின் தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாக(dochennaicitycentral@indiapost.gov.in) மற்றும் வாட்ஸ் அப் (8939646404) மூலமாக வரும் 14ம் தேதிக்குள் அனுப்பலாம்.
குறிப்பாக தியாகராய நகர் தலைமை தபால் அலுவலகம், லயோலா கல்லூரி தபால் அலுவலகம், தியாகராய நகர் வடக்கு தபால் அலுவலகம், ராயப்பேட்டை தபால் அலுவலகம், தியாகராய நகர் தெற்கு தபால் அலுவலகம், லாயிட் எஸ்டேட் தபால் அலுவலகம், இந்தி பிரச்சார சபா தபால் அலுவலகம், தேனாம்பேட்டை தபால் அலுவலகம், மயிலாப்பூர் தலைமை தபால் அலுவலகம், ப்ரின்சிபல் அக்கவுன்டன்ட் ஜெனரல் தபால் அலுவலகம், மந்தவெளி தபால் அலுவலகம், திருவல்லிகேணி, விவேகானந்தா கல்லூரி, சேப்பாக்கம், கிரீம்ஸ் சாலை,
மெட்ராஸ் யுனிவர்சிட்டி, சாஸ்திரி பவன், பார்த்தசாரதி கோயில் தபால் அலுவலகம், டிபிஐ காம்ப்ளக்ஸ் தபால் அலுவலகம், நுங்கம்பாக்கம் தபால் அலுவலகம், தேனாம்பேட்டை மேற்கு தபால் அலுவலகம், நுங்கம்பாக்கம் ஹைரோடு தபால் அலுவலகம், கோபாலபுரம் தபால் அலுவலகம், சூளைமேடு தபால் அலுவலகம் ஆகிய அலுவலகத்தில் ஏதேனும் புகார்கள் இருப்பின் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என சென்னை மத்திய கோட்டம் முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
