- தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில்
- மெட்ராஸ் ஐ.ஐ.டி.
- சென்னை
- தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில் மற்றும் மெட்ராஸ் ஐ.ஐ.டி.
- வின்சென்ட்
- தமிழ்நாடு அறிவியல்…
சென்னை: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் சென்னை ஐஐடி இடையே ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தை ஊக்குவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் சென்னை ஐஐடி இடையே ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தை ஊக்குவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இரு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகள், கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் மனிதவள பரிமாற்றங்களை செயல்படுத்த துவங்கும். அதன்படி, கருத்தரங்குகள், பட்டறைகள், மாநாடுகள் மற்றும் ஆலோசனை கூட்டங்கள் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டு அதன் விளைவுகளை கூட்டு முயற்சியில் புத்தகங்களாக வெளியிடுதல்.
இளம் அறிஞர்கள் மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சித் தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஒழுங்கமைத்தல். தொடர்புடைய ஆர்வமுள்ள துறைகளில் கள அடிப்படையிலான மற்றும் நேரடி ஆராய்ச்சி அனுபவங்களை வழங்க மாணவர்களுக்கு பயனுள்ள ஆராய்ச்சி பயிற்சித் திட்டங்களை வடிவமைத்தல்.
ஆண்டுதோறும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெருமை பெற்ற அறிஞர்களால் கூட்டாக சிறப்பு சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தல். நீண்டகால கற்பித்தல்-ஆராய்ச்சி இணைப்புகளை ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுதல். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
