- திமுக
- திருப்பூர்
- தகவல் அமைச்சர்
- சாமிநாதன்
- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- பதாலி
- மக்கள் கட்சி
- அன்புமணி ராமதாஸ்
- அஇஅதிமுக
- பாமக…
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில்,
பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே 2 பிரிவாக உள்ளது இதில் அன்புமணி ராமதாஸ் உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. ஆனால் பாமகவை ஆரம்பித்து கட்சியை கொண்டு வந்தது நான் தான் என டாக்டர் ஐயா ராமதாஸ் சொல்கிறார் எனவே இதில் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஜனநாயகன் தணிக்கை சான்றிதழை பொறுத்தவரை மாநில அரசுக்கும் தணிக்கை சான்றிதழ்க்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. அது மத்திய அரசின் பொறுப்பு என்றார்.
தொடர்ந்து விஜய் தொடர்பான செங்கோட்டையன் கருத்துகள் குறித்து கேட்டபோது சமீபகாலமாக செங்கோட்டையன் அவர்களின் நகைச்சுவை உணர்வு அதிகரித்து வருவதை இது காட்டுகிறது என்றார். திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் வைத்துள்ளது குறித்த கேள்விக்கு, முதலில் 100 கோடி அபராதமும் ஆறு ஆண்டு காலம் சிறை தண்டனை நீதிமன்றம் அவர்களது தலைவி அம்மாவிற்கு விதித்தது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்லட்டும் இதனை நாங்கள் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம் என்றார்.
