×

சாலையோரத்தில் பாழடைந்த கிணற்றை சுற்றிலும் வேலி: அதிகாரிகள் நடவடிக்கை

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே சோளிங்கரில் இருந்து சித்தூர் செல்லும் நெடுஞ்சாலை வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமான மக்கள் பல்வேறு பணிகள் காரணமாக சென்று வருகின்றனர். இந்த நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில், சாலையோரம் ஒரு பாழடைந்த கிணறு உள்ளது. இதனால் இச்சாலை வழியே வாகனங்களில் செல்பவர்கள், இந்த பாழடைந்த கிணற்றில் நிலைதடுமாறி விழக்கூடிய அபாயநிலை ஏற்பட்டது.

இதையடுத்து, இந்த பாழடைந்த கிணற்றை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக கடந்த 3ம் தேதி தமிழ்முரசு நாளிதழிலும் செய்தி வெளியானது. இதுகுறித்து தகவலறிந்ததும் நேற்று சம்பவ இடத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பாழடைந்த கிணற்றை சுற்றிலும் ஊழியர்கள் மூலம் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக அப்பகுதி மக்கள் அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags : R.K.Pettai ,Solingar ,Chittoor ,
× RELATED திருமழிசை -திருவள்ளூர்...