×

பழநியில் வேளாண் கல்லூரி அமைக்கப்படுமா?

பழநி, ஜன. 7: இந்திய நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் தொன்றுதொட்டு விளங்கி வருகிறது. தமிழக அரசு சமீபத்தில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து விவசாயத்தின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் வேளாண் கல்லூரிகள் துவக்கப்பட்டு வருகின்றன.

பழநியை சுற்றி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளும், அதை சார்ந்த ஏராளமான பகுதிகளிலும் விவசாயம் பெரிய அளவில் நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய நகரான பழநியில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags : Palani ,Tamil Nadu government ,Tamil Nadu.… ,
× RELATED கூரை வீட்டில் திடீர் தீ