- திண்டுக்கல்
- அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம்
- செல்வா தனபகியம்
- பத்மாவதி
- பொருளாளர்
- தமிழ்செல்வி
- மாநிலக் குழு…
திண்டுக்கல், ஜன. 7: திண்டுக்கல்லில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செல்வ தனபாக்கியம் தலைமை வகித்தார். செயலாளர் பத்மாவதி, பொருளாளர் தமிழ்ச்செல்வி, மாநில குழு உறுப்பினர் பரிதா பேகம் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் பணி ஓய்வு பெறும் போது பணிக்கொடை ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.9000 வழங்க வேண்டும். மே மாத விடுமுறை ஒரு மாத காலமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
