×

பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

நத்தம், ஜன. 7: தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக ரொக்கம் ரூ.3 ஆயிரமும் மற்றும் பச்சரிசி, சீனி தலா 1 கிலோவும், கரும்பு ஒன்றும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதையொட்டி நத்தம் தாலுகா முழுவதும் உள்ள நியாய விலை கடைகள் பகுதிநேர கடைகள் உள்பட 76 கடைகள் மூலம் ரேஷன் பொருட்கள் பெற்று வரும் குடும் அட்டைதாரர்கள் 48 ஆயிரத்து 573 பேர் உள்ளனர்.

இவர்களுக்கு சிரமமின்றி பொங்கல் பரிசு தொகுப்பு பெற ஒவ்வொரு நாளும் 200 பேர் வீதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களுக்கான டோக்கன் வழங்கி வருகின்றனர். இந்த டோக்கனை ஒவ்வொரு கடையின் விற்பனையாளர், பணியாளர்கள் வீடு தேடி சென்று குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கி வருகின்றனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு இன்னும் சில நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. டோக்கனை பெற்று கொண்டவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டதுடன் இதனை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

 

Tags : Natham ,Tamil Nadu government ,
× RELATED கூரை வீட்டில் திடீர் தீ