×

இந்தியாவில் அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது மஹிந்திரா 7XO..!!

டெல்லி: இந்தியாவில் அட்டகாசமான அம்சங்களுடன் மஹிந்திரா XUV 7XO பிரமாண்டமாக அறிமுகமானது. இதன் புதிய அம்சங்கள்,

*மஹிந்திராவின் புதிய 7XO – AX, AX3, AX5, AX7, AX7 T, AX7 L ஆகிய 6 வேரியண்ட்களில் வெளியாகியுள்ளன.

*ஆரம்பம் விலை ரூ.13.66 லட்சம் முதல் தொடங்கும் நிலையில், முதல் 40,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த அறிமுக சலுகை.

* பின் இருக்கை பயணிகள் கால்களை நீட்டிக்க முன் இருக்கையை நகர்த்தும் ‘பாஸ் மோட், 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் டால்பி விஷன்-அட்மாஸ் வசதி அறிமுகம்

*லெவல் 2 ADAS தொழில்நுட்பத்துடன் 540-டிகிரி கேமரா வசதி, 7 ஏர்பேக்-கள், இந்தியாவில் முதல் முறையாக, Alexa-வுடன் இணைந்த ChatGPT AI தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது.

*டாடா சஃபாரி, MG ஹெக்டர்+ மற்றும் ஹூண்டாய் அல்கஸார் போன்ற கார்களுக்கு போட்டியாக புதிய மஹிந்திரா XUV 7XO அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது ஜனவரி 14ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.13.66 லட்சத்தில் தொடங்குகிறது. டெஸ்ட் டிரைவ் ஜனவரி 8 முதல் தொடங்குகிறது.

Tags : MAHINDRA ,INDIA ,DELHI ,
× RELATED 1980களில் கிரிக்கெட் வீரருடனான உறவின்...