×

காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு: எல்ஐசி அறிவிப்பு

 

சென்னை: காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குவதாக எல்ஐசி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, எல்ஐசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காலாவதியான பாலிசிகளை புதுப்பிப்பதற்காக ஒரு கவர்ச்சிகரமான சலுகையை எல்ஐசி அறிவித்துள்ளது. காலாவதியான தனிநபர் பாலிசிகளுக்காக 1.1.2026 முதல் 2.3.2026 வரை ஒரு சிறப்புப் புதுப்பித்தல் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதுப்பித்தலுக்கு தகுதிபெறும் அனைத்து பங்குச்சந்தை சாராத காப்பீட்டுத் திட்டங்களுக்கும், தாமத கட்டணத்தில் 30 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.5000 வரை சலுகை வழங்கப்படுகிறது.

அதன்படி, மொத்தமாக செலுத்த வேண்டிய பிரீமிய தொகை ரூ.1 லட்சம் வரை தாமத கட்டண சலுகை 30 சதவீதமும், அதிகபட்சம் அனுமதிக்கப்பட்ட சலுகையாக ரூ.3000மும், 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை தாமத கட்டண சலுகையாக 30 சதவீதமும், அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட சலுகை ரூ.4 ஆயிரமும், ரூ.3 லட்சத்திற்கு மேல் தாமத கட்டண சலுகை 30 சதவீதமும், அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட சலுகை ரூ.5 ஆயிரமும், நுண் காப்பீட்டு திடங்களுக்கு 100 தாமத கட்டண சலுகை சதவீதமும் நிபந்தனைக்குபட்டு வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு புதுப்பித்தல் முகாமின் கீழ், பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதன் மூலம் முதல் செலுத்தப்படாத பிரீமிய தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் உள்ள பாலிசிகளை புதுப்பிக்கலாம். பிரீமியம் செலுத்தும் காலத்தில் காலாவதியான நிலையில் உள்ள மற்றும் பாலிசி காலம் நிறைவடையாத பாலிசிகள் இந்த முகாமில் புதுப்பிக்க தகுதி பெறும். அதுபோல, மருத்துவ, உடல் நிலை குறித்த சான்றுகளுக்கு எந்த சலுகைகளும் இல்லை. எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக சரியான நேரத்தில் பிரீமியத்தைச் செலுத்த முடியாத பாலிசிதாரர்களின் நலனுக்காக சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

தொடங்கப்பட்ட ஒரு பாலிசியின் முழு காப்பீட்டு பலனைப் பெற அந்த பாலிசி நடைமுறையில் வைத்திருக்கப்பட வேண்டியது அவசியம். ஆதலால் காலாவதியான பாலிசியை புதுப்பித்து, காப்பீட்டுப் பாதுகாப்பை மீட்டெடுப்பது எப்போதும் சிறந்தது. பாலிசிதாரர்களையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனையும் எல்ஐசி மிகவும் மதிக்கிறது. இந்த முகாம் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு தங்கள் பாலிசிகளை புதுப்பித்து, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு நல்லவாய்ப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Tags : LIC ,Chennai ,
× RELATED தென்னிந்தியர்களுக்கு குளோபிடோக்ரல்...