×

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவரின் பின்புல தகவல் சேகரிக்கும் அரசாணை ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரையைச் சேர்ந்த அமீர் ஆலம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது சட்ட விரோதம். வகுப்பறையில் இதுபோன்ற விபரங்கள் சேகரிக்கப்படுவதால், மாணவரின் தனிப்பட்ட தகவல்கள், சக மாணவர்களுக்கு தெரிய வரும். சமூக சூழலை பாதிக்காதவாறு ரகசியம் காக்கப்பட வேண்டும். எதற்காக இத்தகவல்கள் சேகரிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்தவில்லை. இந்நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், ‘‘இது சட்டத்திற்கு புறம்பானது. மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை மீறுவதாக உள்ளது. தனியார் பள்ளிகளில் இதுபோன்ற கேள்விகளை கேட்க துணிவீர்களா? மாதிரி பள்ளி எனக்கூறி இவ்வளவு தகவல்களை ஏன் கேட்கிறீர்கள்? அந்த தகவல்களை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? குறிப்பிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் அளிப்பதற்காக இந்த தகவல்கள் சேகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், அந்த சிறப்பு கவனம் என்ன என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. தகவல் சேகரிக்கப்படும் முறை இளம் மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும். சேகரிக்கப்பட உள்ள தரவுகளும், அவற்றை ஆவணப்படுத்தும் முறையும் நீதிமன்றத்தின் பார்வையில் தனி உரிமையை முழுமையாக மீறும் செயலாகும்’’ என தெரிவித்த நீதிபதிகள், மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Tags : Court ,Madurai ,Ameer Alam ,Tamil Nadu ,
× RELATED ஊட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை...