ஒட்டன்சத்திரம், ஜன.6: ஒட்டன்சத்திரத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஒட்டன்சத்திரத்திரம் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி முகாம் அலுவலகத்தில் அதிமுக, பாஜ, தவெக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ரகுராஜ், கிருஷ்ணகுமார், நந்தகுமார், கார்த்திகைவேல், லட்சுமணன், சூர்யா, சத்தியமூர்த்தி யோகநாதன், விக்னேஷ், மாரிமுத்து உள்ளிட்ட பலர், அமைச்சர் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது, தலைமை பொதுக்குழு உறுப்பினர் மகுடீஸ்வரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
