- ஒட்டன்சத்திரம்
- சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- வேம்பனன்
- துணை ஜனாதிபதி
- கோகிலா
- கவின்குமார்
- தேன்மொழி
ஒட்டன்சத்திரம், ஜன.6: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் கல்லூரி நிறுவனர் வேம்பாணன், தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கோகிலா, இயக்குநர் கவின்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் தேன்மொழி மாணவிகளுக்கு கல்வி மற்றும் வேலையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். ஆராய்ச்சி திட்ட குழு அலுவலர் மேரி ஜோஸ்பின் இசபெல்லா மாணவிகளிடையே திறன் வளர் பயிற்சிகள் குறித்து விளக்கினார். இந்த பயிற்சி முகாம் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன்களையும், தொழில்முனைவு தகுதிகளையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்டது.
