ஒட்டன்சத்திரம், ஜன.6: பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் முக்கிய வழித்தடமாக ஒட்டன்சத்திரம் பகுதி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பக்தர்கள், அரசப்பிள்ளைப்பட்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, சிந்தலவடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளின் வழியாக செல்கின்றனர். இந்நிலையில் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. மேலும், நடைபாதைகளை சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், பிரபு பாண்டியன், ஊராட்சி செயலர்கள் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
