- பிராட்வே பேருந்து நிலையம்
- திராவிதா
- அமைச்சர்
- ப. கே.
- சேகரப்பு
- தாண்டியார்பெட்டி
- பி. கே. சேகரப்பு
- பெருநகர சென்னை மாநகராட்சி
தண்டையார்பேட்டை: திராவிட மாடல் ஆட்சியில் பொன்னெழுத்துக்களால் பதிக்கவேண்டிய பேருந்து நிலைய மாக பிராட்வே பேருந்து நிலையம் அமைய உள்ளது என வடசென்னை வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று ஆய்வு செய்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ சார்பில், தீவுத்திடலில் கட்டப்பட்டு வரும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மையம், ராயபுரம் பேருந்து நிலையம் மற்றும் வில்லிவாக்கம் மாநகராட்சி திருமணமண்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:
75 ஆண்டு பழமைவாய்ந்த பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் பல்வேறு இடர்பாடுகளை கடந்து இந்த மாதத்திற்குள் பிராட்வே பேருந்து நிலை யப்பணிகள் தொடங்கவிருக்கின்றன. குறளகத்துடன் இணைந்த பல்நோக்கு போக்குவரத்து வசதி வளாகத்தில் 73 பேருந்துகள் நிறுத்துவதற்கான தளவாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மணி நேரத்திற்கு 466 முறை பேருந்துகள் வந்து செல்லும் நிலையுள்ளது. பிராட்வே புதிய பேருந்து நிலையம் செயல்பட தொடங்கும்போது, வடசென்னை மக்கள் பிரதான பயனாளிகளாக இருப்பார்கள். ராயபுரம் தற்காலிக பேருந்து நிறுத்த இடத்தில் 55 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதி உருவாக்கப்பட்டுள்ளன. 4 ஏக்கர் பரப்பளவில் ரூ.7.47 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 2,000 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதால், தினமும் 40,000 மக்கள் இங்கிருந்து பயணம் செய்வார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட ஆய்வில் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையம் தற்காலிகமானதாகவும் போதுமானதாக இருக்கும் என கருதினோம். தொடர்ச்சியான ஆய்வுகளின் அடிப்படையில், இங்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக ஒரு துணை தற்காலிக பேருந்து நிலையமாக தீவுத்திடலில் சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நீர்வளத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடமிருந்து சில இடங்களை பெற்று அங்கும் மேம்பாட்டு பணி தொடங்கப்பட்டுள்ளது.
தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிலையத்தில் ரூ.7.77 கோடி மதிப்பீட்டில் சாலை அமைத்தல், ஒரே நேரத்தில் 34 பேருந்துகள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2,000 முறை பேருந்து வந்து செல்லும் நிலையில், இங்கும் தினமும் சுமார் 40,000 மக்கள் பயணம் செய்வார்கள் என கணக்கிடப் பட்டுள்ளது. இந்த திட்டம் வடசென்னையின் வளர்ச்சியில் ஒரு பொற்காலமாக அமைவதாகும். தமிழக முதல்வர் திராவிட மாடல் ஆட்சியின் நாயகர், அவர் ஆட்சி காலத்தில், பொன்னெழுத்துக்களால் பதிக்கவேண்டிய ஒரு பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் அமையவுள்ளது.
மொத்தமாக சுமார் ரூ.800 கோடி மதிப்பீட்டில் குறளகத்துடன் இணைந்த பல்நோக்கு போக்குவரத்து வசதி வளாகம் பெருந்திட்டமாக அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலைய பணிகளுக்கான துவக்கவிழா முதல்வரால் இந்த மாதம் 25ம்தேதிக்குள் நடைபெறும். விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் வழங்குது குறித்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி நிர்மல் குமார் கருத்துக்கு, தடைகள் பல உண்டென்றால் அதை தகர்த்தெறியும் திறன் என்பது 75 ஆண்டுகால பவள விழா கண்ட திராவிட இயக்கத்திற்கு உண்டு. இந்த வார்த்தை திமுகவுக்கு சொந்தமான வார்த்தை. இந்த வார்த்தைக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் சம்பந்தமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
